மாகாண சபை அதிகாரங்கள் பறிப்பு: மோடியிடம் முறையிடவுள்ள தமிழரசின் முக்கிய புள்ளி
மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் இந்தியப் பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின்(ITAK) பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம்(C. V. K. Sivagnanam) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில்(Jaffna) நேற்று(28.03.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியளவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
நரேந்திர மோடியுடனான சந்திப்பு
இந்த விஜயத்தின் போது இலங்கை தமிழரசு கட்சியினர் அவரை சந்திக்க வாய்ப்பு இருக்கின்றது.
அந்த சந்திப்பிலே முக்கியமாக இப்போதிருக்கக்கூடிய எங்களுடைய மாகாண சபை முறைமை தொடர்பாக அதில் இருக்கும் அதிகாரங்கள் படிப்படியாக பறிக்கப்பட்டுவருவது தொடர்பாகவும் அதனுடன் இணைந்த பல விடயங்கள் தொடர்பாகவும் அவரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளோம்.
இதேவேளை, எங்களுடைய உணர்வுகளை புரிந்துகொண்டு தேசிய ரீதியான தீர்வுக்கான முன்மொழிவை பிரதமர் மோடி அவர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்ற கருத்தை மோடிக்கு தெரிவிப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
