பார்ப்பன வெறியின் உச்சம் தான் PSBB - 10 ஆண்டுகளாக தொடரும் துன்புறுத்தல்! சவுக்கு சங்கர்
பார்ப்பன வெறியின் உச்சம் தான் பத்ம சேஷாத்ரி பள்ளி (PSBB) என முன்னாள் மாணவர்கள் கூறுவதாக மூத்த பத்திரிகையாளரும், அரசியல் திறனாய்வாளருமான சவுக்கு சங்கர் தெரிவித்தார்.
எமது ஊடகத்தின் மெய்பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.
பாலியல் புகாரில் கைதான சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை வரும் ஜுன் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜகோபாலன் மீது பள்ளியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவிகள் சிலர் பாலியல் புகார் கொடுத்ததன் அடிப்படையில் சென்னை பொலிஸ் விசாரணையை முடுக்கியுள்ளது.
சமூக வலைத்தளம் முழுவதும் ஆசிரியர் ராஜகோபாலன் கொடுத்த வந்த பாலியல் தொல்லைகளை குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் வெளிச்சத்துக்கு கொண்டு வரும் நிலையில் இது தொடர்பில் பள்ளி நிர்வாகம் பல மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் சவுக்கு சங்கர் இதன் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தினார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,