சுயாதீனமான தேர்தல்கள் ஆணைக்குழுவை விசாரிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நிறுவுவது நெறிமுறையல்ல
தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக ஆணைக்குழுவை விசாரிப்பது நெறிமுறையல்ல என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பிரேரணையானது தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிறப்புரிமைகளை மீறும் செயலாகும் எனவும் வலியுறுத்தியுள்ளளார்.
மேலும், இந்த நாட்டின் தேர்தல் வரலாறு மிகவும் இருண்ட மற்றும் அருவருப்பான வரலாற்றைக் கொண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிபர் தேர்தலில் இருந்து தப்பிக்கும் முயற்சி

இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
“தேர்தலை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு சுயாதீனமாக நடத்துவதற்காகவே தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக தேவையான அனைத்து ஒழுங்குமுறை நடவடிக்கைகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி அதிபர் தேர்தலில் இருந்து தப்பிச் செல்ல முயற்சிக்கின்றனர்.
தேர்தல் ஆணைக்குழுவை நாடாளுமன்றத்திற்கு அழைக்கும் முயற்சி நிறுத்தப்பட வேண்டும்” என்றார்.