திருத்தப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் !
திருத்தப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உடனடியாக பொதுமக்களின் ஆலோசனைக்காக அனுப்பப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று (17.11.2025) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தற்போது தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மொழிபெயர்ப்பு
இவ்வாறு இரண்டு மொழிபெயர்ப்புகளும் கிடைத்தவுடன் பொதுமக்களின் ஆலோசனை அனுப்பப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றீடாக, புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் முன்மொழியப்பட்ட புதிய வரைபு, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது.
குழுவின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன இதனை நீதி அமைச்சரிடம் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்