அம்பலாங்கொடை துப்பாக்கிசூடு : சந்தேக நபரை கைது செய்ய காவல்துறை விடுத்துள்ள அறிவிப்பு
2024 நவம்பரில் அம்பலாங்கொடை(Ambalangoda) பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
2024 நவம்பர் 10 ஆம் திகதி காலி-கொழும்பு பிரதான சாலையில் உராவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரு ஆணும் பெண்ணும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தப்பியோடிய சந்தேகநபர்
அம்பலாங்கொடை காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் படபொலை காவல் பிரிவில் வசிக்கும் ஒரு சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்,ஆனால் சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
தேடப்படும் சந்தேக நபர் பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள் 071-8591484 அல்லது 091-2291095 என்ற தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

