தென்னிலங்கையில் பயங்கரம்: பொது சுகாதார பரிசோதகர் சுட்டுக்கொலை
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Kathirpriya
பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூடு இன்று (26) காலை 07.00 மணியளவில் இடம்பெற்றதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவல்துறைமா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேலதிக விசாரணை
"எல்பிட்டிய, பத்திராஜ மாவத்தையில் மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி ஒருவரால் 51 வயதான குறித்த பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில், அவர் உயிரிழந்தாகவும் சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளதாகவும்" அவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 3 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி