ஊழல் தொடர்பில் வாக்குமூலம் அளித்தவர் இடமாற்றம் : வேலை நிறுத்தத்தில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது.
சங்கத்தின் செயற்குழு இன்று பிற்பகல் (19) கூடி இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் என அதன் பதில் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி மற்றும் ஊழல் குறித்து சுகாதார அமைச்சகத்தின் புலனாய்வுப் பிரிவிடம் வாக்குமூலம் அளித்த ஒரு பொது சுகாதார பரிசோதகர், நிர்வாக விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்குப் புறம்பாக இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் சங்கம் இந்த வேலைநிறுத்தத்தைத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்த இறுதி முடிவு
இவ்விடயம் தொடர்பாக மேலும் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும், நாளை தொடங்கும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்த இறுதி முடிவு இன்றைய கலந்துரையாடலின் போது எடுக்கப்படும் என்றும் உபுல் ரோஹன மேலும் தெரிவித்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |