இலங்கையில் அச்சுறுத்தலாகும் விசர்நாய்க்கடி நோய் : பரிதாபமாக பறிபோன மனித உயிர்கள்

Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples Death
By Jaso Feb 18, 2026 01:29 PM GMT
Report

இலங்கையில் விசர்நாய்க்கடி நோய் அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்து வருவதாகவும், இதுவரையில் 14 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ள சுகாதார அதிகாரிகள், விலங்குகள் கடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சையைப் பெறுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் சமூக விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் அதுல லியனபத்திரன இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,

100 சதவீதம் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது

விசர்நாய்க்கடி நோய் 100 சதவீதம் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது என்றாலும், அதனை முழுமையாகத் தடுக்க முடியும் என தெரிவித்தார். 2030 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் விசர்நாய்க்கடி நோயினால் ஏற்படும் மரணங்களைப் பூச்சியமாகக் குறைப்பதே இலக்காகும் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் அச்சுறுத்தலாகும் விசர்நாய்க்கடி நோய் : பரிதாபமாக பறிபோன மனித உயிர்கள் | Public Over Continued Threat Of Rabies

அண்மைய மரணங்களில் பெரும்பாலானவை புத்தளம், குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பதிவாகியுள்ளன. இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 250,000 விலங்குக் கடி சம்பவங்கள் பதிவாகின்றன, இதில் பெரும்பாலானவை நாய்க்கடிகளாகும்.

கொழும்பு மற்றும் கம்பகா மாவட்டங்களில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளமை அண்மைய மரணங்களுக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.

வாழைச்சேனை காதி நீதிபதி அதிரடி கைது!

வாழைச்சேனை காதி நீதிபதி அதிரடி கைது!

செல்லப்பிராணிகளுக்குச் சரியான முறையில் தடுப்பூசி ஏற்றுதல்

விசர்நாய்க்கடி நோயைத் தடுக்க செல்லப்பிராணிகளுக்குச் சரியான முறையில் தடுப்பூசி ஏற்றுதல், விழிப்புணர்வை அதிகரித்தல், விலங்குகள் கடித்தவுடன் காலம் தாழ்த்தாது சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற ஆலோசனைகளையும் நிபுணர்கள் வழங்கியுள்ளனர்.

இலங்கையில் அச்சுறுத்தலாகும் விசர்நாய்க்கடி நோய் : பரிதாபமாக பறிபோன மனித உயிர்கள் | Public Over Continued Threat Of Rabies

சிறிய காயமாக இருந்தாலும் அதனைப் புறக்கணிக்க வேண்டாம் என்றும், மேலதிக மரணங்களைத் தவிர்க்க உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறும் அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். 

எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கிய தலைவருடன் படத்தில் இருக்கும் இந்திய அதிகாரி!

எப்ஸ்டீன் கோப்புகளில் சிக்கிய தலைவருடன் படத்தில் இருக்கும் இந்திய அதிகாரி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026