தொடர்ந்தும் சிகிச்சையில் மகிந்த:மொட்டுக்கட்சி தகவல்
SLPP
Mahinda Rajapaksa
Sanjeeva Edirimanna
By Sindu
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (SLPP) உறுப்பினர் சஞ்சீவ எதிரிமன்ன தெரிவித்துள்ளார்.
வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் (12) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.
தனியுரிமைக்கு மதிப்பு
அவர் மேலும் தெரிவித்ததாவது,"தற்சமயம் என்னால் கூற முடிவது என்னவென்றால், மகிந்த ராஜபக்ச தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நான் அவரது தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும், எனவே தற்போதைக்கு இந்தத் தகவலை மட்டுமே வெளியிட முடியும்," என்று எதிரிமன்ன கூறினார்.
முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை குறித்த மேலதிக தகவல்கள் சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர்களால் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்