சமூக ஊடகங்களில் போலி தகவல்களை பரப்பினால் சட்ட நடவடிக்கை:காவல்துறை எச்சரிக்கை
சமூக ஊடகங்களில் தவறான மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பி பொது அமைதியை சீர்குலைத்து மக்களை தவறாக வழிநடத்தும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை காவல்துறை எச்சரித்துள்ளது.
காவல்துறை செய்தித் தொடர்பாளர் உதவி காவல் கண்காணிப்பாளர் எஃப்.யு.வுட்லர் நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை தெரிவித்திருந்தார்.
இத்தகைய பதிவுகள் பெரும்பாலும் தேவையற்ற பொது அமைதியின்மையை ஏற்படுத்துவதாகவும், மக்களைத் தவறாக வழிநடத்துவதாகவும், பொதுமக்களிடையே அச்சத்தைப் பரப்புவதாகவும் கண்டறியப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
தகவல்களை பகிர வேண்டாம்
இத்தகைய நடவடிக்கைகளை இலங்கை காவல்துறை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், சமூக ஊடகத் தளங்களில் தவறான அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டதாகவும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இத்தகைய குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை கணினிக் குற்றச் சட்டம் மற்றும் இலங்கை தண்டனைச் சட்டத்தின் கீழ் சட்டத்தின் முன் நிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் எச்சரித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |