வவுனியாவில் குத்தகைக்கு பெற்ற வாகன பாகங்களை பிரித்து விற்றவர் கைது
டிப்பர் ரக வாகனங்களை நிதி நிறுவனங்களில் இருந்து குத்தகை அடிப்படையில் பெற்று அவற்றின் பகுதிகளை பிரித்து விற்பனை செய்த ஒருவர் வவுனியா மாவட்ட குற்ற தடுப்பு விசாரணை பிரிவினரால் கைதுசெய்யபட்டுள்ளார்.
இது தொடர்பான முறைப்பாடுகள் காவல்துறைக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் மேற்கொண்ட விசாரணைக்கு அமைவாக குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடவடிக்கைக்கு அமைய தாண்டிக்குளம் பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தொடர்ச்சியாக பல டிப்பர் வாகனங்களை இவ்வாறு கொள்வனவு செய்து அதன் பகுதிகளை பிரித்து விற்பனை செய்துவந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவரிடம் இருந்து வாகனத்தின் இயந்திர அடிச்சட்டங்கள் ஒரு தொகை கைப்பற்றப்பட்டதுடன் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |