உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு
2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர உயிரியல் முறைமைத் தொழில்நுட்பப் பாடத்தின் செய்முறைப் பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள், இன்று (14) முதல் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக அவற்றை தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 67 பரீட்சை நிலையங்களில், உயிரியல் முறைமைத் தொழில்நுட்பப் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சைகள் ஒக்டோபர் 17 முதல் 21 வரை நடைபெறும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள்
திணைக்களத்தின் தகவல்படி, பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே அந்தந்தப் பாடசாலை அதிபர்களுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன; அதேவேளை, தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் அவர்களின் விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அனுமதி அட்டைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள், திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் ஊடாக அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.
பரீட்சைகள் தொடர்பான மேலதிக வினவல்களுக்கு, விண்ணப்பதாரர்கள் பின்வரும் வழிகள் மூலம் பரீட்சைகள் திணைக்களத்தைத் தொடர்புகொள்ளலாம்:
அவசர அழைப்பு எண் (Hotline): 1911
தொலைபேசி: 0112784208 / 0112784537
தொலைநகல் (Fax): 0112784422
மின்னஞ்சல்: gcealexam@gmail.com
[
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |