எதையும் செய்ய தயங்க மாட்டோம்! சரத் வீரசேகர பகிரங்க அறிவிப்பு
நாட்டு மக்களுக்கு கேடு விளைவிக்கப்படுகின்ற வேளையில், மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படுகின்ற நிலையில் அதனை தடுக்காது வேடிக்கை பார்ப்பதற்கு எதற்கு அரசாங்கம் எனபொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இவ்வாறான சூழலில்தான் அரசாங்கம் தலையிட்டு தீர்வை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்.
இது அனைத்துமே மக்களுக்காகவே செய்யப்படுகின்றது. மக்களின் நலன்களுக்காக அவசரகால சட்டம் மட்டுமல்ல, எந்த சட்டத்தையும் கையாள நாம் தயாராகவே உள்ளோம். மக்களும் அதனை வரவேற்கின்றனர்.
ஆனால் எதிர்க்கட்சி மட்டுமே அதனை எதிர்கின்றது என்றார். நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.
யுத்தத்திற்கு பயன்படாத வாள் பின்னர் எதற்கு? அதேபோல் மக்களின் நலன்களுக்கு பயன்படாத சட்டம் நடைமுறையில் இருப்பதில் பயனென்ன?
ஆகவே மக்கள் நெருக்கடி நிலைமைகளை எதிர்கொள்ளும் நேரத்தில் அவசரகால சட்டமல்ல, வேறு எந்த சட்டத்தையும் பயன்படுத்தி மக்களை பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுப்போம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.