பொது போக்குவரத்து தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
sri lanka
travel
dilm amunugama
By Shalini
பொது போக்குவரத்து தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதில் சுகாதார வழிகாட்டல்களை மீறும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேலும், இவ்வாறான பேருந்துகளைக் கண்காணிப்பதற்கான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.