தமிழகத்தை உலுக்கிய 9 வயது சிறுமி கொலை! அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்
இந்தியா புதுச்சேரி மாநிலத்தையே உலுக்கியுள்ள 9 வயது சிறுமி ஆர்த்தியின் கொலையானது மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியான ஆர்த்தி 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 2ஆம் திகதி மதியம் வீட்டினருகே விளையாடிக் கொண்டிருந்தவள் திடீரென காணாமல் போயியுள்ளார்.
இதனை தொடர்ந்து முத்தியால்பேட்டை காவல்துறையில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணைகளில் அந்த பகுதியில் ஒரே ஒரு கேமராவில் மட்டுமே சிறுமி நடமாட்டம் குறித்த காணொளி பதிவாகியுள்ளது.
சிறுமியின் மரணம்
எனவே அந்த சிறுமி சோலை நகர் பகுதியை விட்டு வெளியே செல்லவில்லை என்பது உறுதியானது. இதை வைத்து காவல்துறையினர் வீடு வீடாக சென்று மாணவி குறித்து விசாரித்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் (5) சிறுமியின் உடல் அவளது வீட்டின் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
சந்தேகத்தின்பேரில் போதைபொருள் 5 பேரை பிடித்து விசாரித்து வந்த நிலையில் தற்போது கருணாஸ் (வயது 19), விவேகானந்தன் (57) ஆகியோரை பிடித்து விசாரித்தில் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தி கொடூரமாக கொன்று சாக்கடை கால்வாயில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமியின் உடல் நல்லடக்கம்
இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று சிறுமியின் வீட்டில் இருந்து சுடுகாடு வரை இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றுள்ளதுடன் இறுதி ஊர்வல வாகனத்தில் சிறுமியின் உடலுக்கு அருகே புத்தகங்கள், விளையாட்டு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. சிறுமியின் உடலுக்கு வழிநெடுகிலும் நின்று மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
மேலும், இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருவதோடு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விசாரணைகள் ஆரம்பம்
சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணைகளை அதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு குழு இன்று(7) ஆரம்பித்துள்ளது.
புதுச்சேரி அரசு நேற்று(6) இரவு குறித்த குழுவை நியமித்த நிலையில், சிறுமியின் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் விசாரணைக்காக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் கவனயீனம் மற்றும் சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் தற்போது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காவல்துறையினரின் கவனயீனம்
இந்த நிலையில், குறித்த சிறுமியின் மரணம் தொடர்பான விசேட குழுவினரின் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஐவரிடமும் இன்று தனித்தனியாக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன், சிறுமி கொலை செய்யப்பட்ட விவேகானந்தன் வீட்டில், இன்று தடய அறிவியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர்.
குறித்த வீட்டில் உள்ள தடயங்களை சேகரிக்கும் பணிகள் தீவிரமான முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், குறித்த சிறுமியின் கொலையுடன் தொடர்புடையதாக கருதப்படும் நபர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்காக, ஜிப்மர் ஆய்வுகத்துக்கு அனுப்பி வைக்கபட்டு உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |