செம்மணி மனித புதைகுழி குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி - நீதி அமைச்சர்
By Pavi
செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார உறுதியளித்துள்ளார்.
இன்று (28.07.2026) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் அவ்வபறு கருத்து தெரிவித்தார்.
இந்த ஊடக சந்திப்பில் இது தொடர்பான இன்னும் சில விடயங்களை அவர் கூறி இருந்தார்.
ஹர்ஷண நாணயக்கார உறுதி
இதன்படி கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர், "இந்த பேரவலத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளா, இந்திய அமைதிப்படையினரா அல்லது இலங்கை ஆயுதப்படைகளா காரணம் என்பது தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் இறுதியிலேயே முழுமையாகத் தெரியவரும்" என கூறி இருந்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி