கருப்புப் பண விவகாரம்! பசில் உடன் பதவி விலக வேண்டும் - எதிர்க்கட்சி கோரிக்கை
கருப்புப் பணத்தைப் பயன்படுத்தி வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை இலங்கை வாங்கியதாகக் கூறிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பொதுச் செயலாளருமான ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கம் இப்போது என்ன செய்கிறது? கருப்புப் பணத்தை எடுக்க வேண்டும் என்கிறார். அது யாருடைய கருப்புப் பணத்தை சொல்கிறார்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பு - மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கருப்பு பணத்தை கட்டுப்படுத்த இந்த நாட்டில் சட்டம் இல்லை. சர்வதேச தடைகள் இல்லாமல் வர்த்தகம் செய்ய இந்த நாட்டு மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. சர்வதேச அளவில் சர்வதேச சமவாயங்களுக்கு உடன்பட்டிருக்குறோம்.
நாங்கள் இதற்கு எதிர்க்கிறோம். ஆனால் இவர்கள் வடகொரியாவில் இருந்து கருப்பு பணத்தை கையாள்கின்றனர். ஆபிரிக்க நாடுகளில் கருப்புப் பணம் இருப்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் யாருடைது என்பது தெரியாது, அது யாருக்கும் சொந்தமானது அல்ல, இந்த கருப்புப் பணம் இந்த நாட்டிலிருந்து திருடப்பட்ட பணம் என்று கூறப்படுகிறது.
இன்று நாடு இப்படி வங்குரோத்து நிலையில் உள்ளது. ராஜபசக்கள் இந்த நாட்டை கட்டுப்பாட்டில் வைக்கவில்லை. ஒரு நாட்டை ஆளவே ஒரு அரசாங்கம் நியமிக்கப்படுகிறது. இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் பொருளாதாரத்தை கட்டுப்படுத்த முடியாது மற்றும் பொருட்களின் இறக்குமதி மீது கட்டுப்பாடுகள் இல்லை.
மருந்துகளை இறக்குமதி செய்யும் திட்டமும் இல்லை. நாளைக்குள், எல்என்ஜி விநியோகமும் ஒரு அமெரிக்க நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படும்போது, மின் உற்ப்பத்தி ஆற்றல் மீது எந்தக் கட்டுப்பாடும் இருக்காது. இந் நாட்டு மக்களை துன்புறுத்தாமல் செய்ய முடியாவிட்டால் பதவி விலகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தேர்தல் அச்சம் அரசாங்கம் இந்த வாரம் மாகாண சபை திருத்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வரவுள்ளது. ஏன் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதில்லை என்று இந்த மக்களிடம் கேட்கிறோம். மக்களின் விருப்பத்தை அறிய குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
எமது மாகாண சபைகள் கலைக்கப்பட்டு கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகின்றன. தயவு செய்து மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம்.அதற்கு நாம் எப்பொழுது தயாராக இருக்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 15 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்