ஆடம்பர கட்டில் உட்பட பல மில்லியனுக்கு பொருட்கள் வாங்கிய எம்.பி - வெளிவந்த செய்தி
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.பி. ஹேரத் மோசடியாக சேமித்த பணத்தினால் பல பொருட்களை கொள்வனவு செய்திருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இவர், சுமார் 20 இலட்சம் ரூபா செலவில் கட்டில் ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாகவும், இதுதவிர வீட்டிற்கு பல மில்லியன் ரூபா செலவில் பொருட்களை கொள்வனவு செய்திருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் அரச செலவில் தனது வீட்டையும் புனரமைப்பு செய்திருப்பதாகவும் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் பணத்தை மோசடி செய்து அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், மேலும் இதற்காக சட்டவிரோதமான முறையில் ஆவணங்களை தயார் செய்துள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்