"புஷ்வாணமான பசிலின் முதலாவது வரவு செலவுத் திட்டம்"
அரசாங்கத்தின் மீது மக்களுக்கு பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாத போதிலும் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஓரளவு நிவாரணத்தை வழங்கும் என்ற சிறிய நம்பிக்கையை கொண்டிருந்தனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன (Ruwan wijewardana) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"வாகன விபத்துக்கு வரி விதித்ததன் மூலம் அரசாங்கம் இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக நடுத்தர வகுப்பு மக்களின் சட்டை பைக்குள் கை வைத்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி மக்களின் சட்டை பைகளை நிரப்பியது எனினும் சௌபாக்கிய நோக்கின் மூலம் மக்களின் சட்டை பைகள் வெற்று பைகளாக மாற்றப்பட்டுள்ளன.
நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் (Basil Rajapaksa) முதலாவது வரவு செலவுத் திட்டம் புஷ்வாணம் என்பது தற்போது நாட்டுக்கு தெரியவந்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
You May like This