இந்தியாவின் தொன்மை வரலாறு பிரமிக்க வைக்கிறது..! ரஷ்ய ஜனாதிபதி புதின் புகழாரம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், இந்தியாவின் பழமையான நாகரிகத்தையும் அதன் மொழி பன்முகத்தன்மையை பற்றி பாராட்டி பேசியுள்ளார்.
ரஷ்ய ஊடகமொன்றிற்கு அண்மையில் வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வரலாறு மற்றும் கலாசாரம் குறித்து மேலும் அறிந்துகொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவை மீதான தனது ஆர்வம் அதிகரித்து வருவதாக புதின் குறிப்பிட்டுள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை : இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்து செல்லவுள்ள திருமாவளவன்
மொழிப் பன்முகத்தன்மை
அத்துடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான அண்மைய உரையாடலையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

இதன்போது, இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மை மற்றும் நாட்டில் பேசப்படும் பல்வேறு மொழிகள் குறித்தும் புதின் வியப்புத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நாகரிகம் உலகின் மிகத் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றாக விளங்குவதுடன், அதன் மொழிப் பன்முகத்தன்மையும் வியக்கத்தக்கது என அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் 1.5 பில்லியன் மக்கள் தொகையில், சுமார் 600 மில்லியன் மக்கள் அந்த முதன்மையான மொழியை பேசுவதாக மோடி தன்னிடம் கூறியதாக புதின் தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தங்கள் சொந்த மொழிகளை பேசுகிறார்கள் என்று மோடி விளக்கியதை அவர் நினைவு கூர்ந்தார்.
"இது ஆச்சரியமாக இல்லையா? உண்மையில் இது ஆச்சரியமானதுதான்!" என்று அந்த நேர்காணலில் புதின் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |