உக்ரைன் போருக்கு பின்னர் முதல் முறையாக பிரிக்ஸ்ஸை இலக்கு வைத்து இந்தியாவுக்கு வருகைதந்த புடின்
புதுடில்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18 ஆவது உச்சிமாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் பங்கேற்பதற்காக இந்தியாவை சென்றடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புடின் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று காலை டெல்லியை சென்றடைந்துள்ளார்.
இந்நிலையில் இந்த விசயத்துக்கு மத்தியில் புடினுடன் உயர்மட்ட இராஜதந்திர குழுவும் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூலோபாயக் கூட்டாண்மை
இந்தியாவும் ரஷ்யாவும் சிறப்பு மற்றும் முன்னுரிமை வாய்ந்த மூலோபாயக் கூட்டாண்மையின் அடிப்படையில் பல பரிமாண மற்றும் நீண்டகால உறவுகளைக் கொண்டுள்ள நிலையில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டையும் தாண்டி இந்த விஜயம் முக்கியத்துவம் பெறுவதாக கூறப்படுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய ஜனாதிபதி புடினும் வெள்ளிக்கிழமை பிற்பகல் விரிவான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரேன் போர் ஆரம்பித்த பின்னர், ரஷ்யாவுக்கு வெளியே நடைபெறும் பிரிக்ஸ் கூட்டமைப்பு உச்சிமாநாட்டில் புடின் நேரில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய 11 முக்கிய பொருளாதார நாடுகள் அங்கம் வகிக்கும் சனிக்கிழமை (12) ஆரம்பிக்கும் இரண்டு நாள் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டிற்கு 04 ஆவது முறையாக இந்தியா தலைமை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |