புத்தளம் - நாகவில்லு பகுதியில் விபத்து! கடற்படை வீரர் பலி
Death
Accident
Puttalam
By Vasanth
புத்தளம் - நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்துக் குறித்து தெரிய வருகையில், கொழும்பிலிருந்து பாலாவி சீமெந்து தொழிற்சாலைக்கு பொலித்தீன் கழிவுகளை ஏற்றிச் சென்ற கனரக லொறியுடன் புத்தளம் தம்பபண்ணி கடற்படை முகாமிலிருந்து கொழும்பு சென்ற கடற்படை வீரர் ஒருவர் மோதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த கடற்படை வீரர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரென பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வாகன சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.