புத்தளம் - கொழும்பு வீதியில் விபத்து! அரச பணியாளர்கள் இருவர் பலி ( படங்கள்)
புத்தளம் - கொழும்பு வீதியில் ஆராச்சிக்கட்டுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நுரைச்சோலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வான் ஒன்று வீதியோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் விபத்து சம்பவித்துள்ளது.
இவ் விபத்து சம்பவம் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீதி அபிவிருத்தி திணைக்கள ஊழியர்களான நல்லதரன்கடுவ பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய எஸ்.ஏ.ஜூட் மற்றும் 51 வயதுடைய கே. பிரிம்ஜயந்த ஆகியோர் இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ் விபத்து சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


