சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வாங்கிய நபர்
தனது சிறுநீரகத்தை விற்று அந்தப் பணத்தைப் பயன்படுத்தி போதைப்பொருள் வாங்கியதாக தெரிவிக்கப்படும் பதிவுசெய்யப்பட்ட குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 60 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையை புறக்கோட்டை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
கைது நடவடிக்கை
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் 1993 ஆம் ஆண்டு தீவில் குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், தற்போது புறக்கோட்டையில் உள்ள ஒரு வெளிநாட்டு தங்கம் மற்றும் வெள்ளி நகைக் கடை ஒன்றை கொள்ளையடித்துள்ளார்.
இதில் ஆறு மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைத் திருடியதையடுத்து புறக்கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்க நகை
இந்தநிலையில், அவரால் திருடப்பட்ட தங்க நகைகளில் கிட்டத்தட்ட மூன்று பவுண் மற்றும் கிட்டத்தட்ட மூன்று கிலோ வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொரளை சிறிசந்த உயனவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ள ஒரு மருத்துவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |