தடை நீக்கப்பட்டதை அடுத்து மீண்டும் இலங்கையில் கால் பதித்தது வெளிநாட்டு தொண்டு நிறுவனம்
கட்டார் தொண்டு நிறுவனம் இலங்கையில் தனது அலுவலகத்தை மீண்டும் திறந்துள்ளது.
இலங்கையில் கட்டார் தொண்டு நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த ஆண்டு நீக்கப்பட்டது. கட்டார் அறக்கட்டளையானது கட்டார் அரசாங்கத்தின் பிரதான தொண்டு நிறுவனமாகும்,
தடை செய்ய சரத் வீரசேகர

மேலும் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து இலங்கையில் தடைசெய்யப்பட்டது. அப்போது இலங்கை அதிகாரிகள் ‘கட்டார் அறக்கட்டளை’யை பயங்கரவாத அமைப்பாக பெயரிட்டதுடன், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் முக்கிய வழக்கு தொடர்பாக பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதாக தொண்டு நிறுவனம் மீது குற்றம் சாட்டியிருந்தனர்.
பின்னர் எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர கட்டார் அதிகாரிகளை கட்டாரில் சந்தித்தபோது தடை நீக்கப்பட்டது.
வெளியுறவு அமைச்சரின் நன்றி
At at the launch of the country office today,Qatar Charity @qcharity announced humanitarian aid worth US$ 11.7 million for the year 2023.This will be allocated to identified areas as per the state’s requirements.Thank you Qatar Charity for stepping up to support the vulnerable pic.twitter.com/cAVJ86rILy
— M U M Ali Sabry (@alisabrypc) January 11, 2023
"இன்று அலுவலகத்தை மீண்டும் தொடங்கும் போது, கட்டார் தொண்டு நிறுவனம் 2023 ஆம் ஆண்டிற்கான 11.7 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மனிதாபிமான உதவியை அறிவித்தது. இது அரசின் தேவைகளுக்கு ஏற்ப அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு ஒதுக்கப்படும். பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஆதரவளிக்க முன்வந்ததற்கு கட்டார் தொண்டு நிறுவனத்திற்கு நன்றி ” என இன்று இலங்கையில் கட்டார் அறக்கட்டளை அலுவலகத்தை மீண்டும் திறக்கும் விழாவில் கலந்து கொண்ட பின்னர் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி ட்வீட் செய்துள்ளார்.