இலங்கைக்கு கட்டார் வழங்கியுள்ள பெருந்தொகை அன்பளிப்பு!
இதய மற்றும் சுவாச நோயாளிகளின் சிகிச்சைக்காக ரூபா 120 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான அத்தியாவசிய மருந்துத் தொகை கட்டார் (Qatar) அரசாங்கத்தினால் இலங்கை சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (15) இடம்பெற்றுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, (Ramesh Pathirana) கட்டார் நாட்டினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கையின் (Sri Lanka) சுகாதாரத் துறையை வலுப்படுத்துவதற்காக இவ்வாறான அன்பளிப்புகள் பல வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக கட்டார் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
கட்டார் பணிப்பாளர்
இந்தநிலையில், இலங்கை மற்றும் கட்டார் நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக சர்வதேச உறவு ஒன்று காணப்படுகின்றது என இலங்கைக்கான கட்டார் பணிப்பாளர் மஹமூத் அபு கலிபா (Mahmoud Abu Khalifa) தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்திலும் இலங்கையின் சுகாதாரத் துறையை வலுப்படுத்துவதற்காக இவ்வாறான பங்களிப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |