விவசாயிகளின் உர மானியம் குறித்து அரசாங்கம் எடுக்கவுள்ள தீர்மானம்
தேசிய உற்பத்திக்கான உர மானியத்தை திறம்பட சேகரிக்கும் நோக்கில் QR குறியீடு முறையை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் மாதங்களில் நுகர்வோருக்கு அரிசியை நியாயமான விலையில் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டியதன் அவசியத்தை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களிடம் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் அவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
அரிசி தட்டுப்பாடு
மக்களுக்கு தட்டுப்பாடின்றி அரிசியை வழங்கும் வகையில் நாட்டில் சேமிப்பு கையிருப்பு வசதிகளை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், நாட்டு அரிசியை பெறுமதி சேர்ப்பு பொருட்களுக்கு பயன்படுத்துவதால், நுகர்வுக்கு தேவையான இருப்புகளை குறைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டடுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |