நாட்டில் மீண்டும் இன முறுகலை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி : இம்ரான் மஹ்ரூப் குற்றச்சாட்டு
அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை பார்க்கும்போது மீண்டும் தமிழ், சிங்கள மக்களுக்கு இடையே இன முறுகலை ஏற்படுத்தி அரசாங்கத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கை இடம்பெறுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
அதேபோன்று ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை இனம் காண அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பார்க்கும் போது எமது நாடு எந்த திசையை நோக்கி நகர்கிறது என்று சிந்திக்கத் தோன்றுகிறது.
இன்று நாட்டில் இனவாதத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் காணப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீதான தாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மீ்ண்டும் தமிழ், சிங்கள மக்களுக்கு இடையே இன முறுகலை ஏற்படுத்தி அரசாங்கத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் செய்கிறதா என்ற சந்தேகத்தினை எழுப்பியுள்ளது
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.