இனவெறியின் உச்சம்! தமிழர்களை மிரட்டும் சிங்கள அரசு
இலங்கைக்குள்ளே தமிழர்கள் சிங்களவர்களோடு ஒற்றுமையாக வாழமுடியாது என்பது தற்போது அப்பட்டமாக தெரியவருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
கிழக்கில் தமிழர்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஐபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியோக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்குள்ளே நம்மோடு சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழமுடியாது என்ற இரு தெளிவான செய்தியை தான் சிங்கள இனவாதிகள் கூறி நிக்கிறார்கள்.
தமிழர் பகுதியில் விகாரைகளை நிறுவி அவர்கள் செய்யும் அட்டூழியங்களும் தமிழர் நில ஆக்கிரமிப்புகளும் கலாச்சார அழிப்பும் தாங்கள் தான் இலங்கையின் பூர்வீக குடிகள் என்ற அலச்சிய மனபாங்கின் உச்சத்தில் அவர்கள் செயற்படுகின்றனர் என்றார்.
தமிழர்கள் மீதான சிங்களவர்களின் இனவெறியாட்டம் குறித்து சிவாஜிலிங்கம் தெரிவித்ததை கீழ் உள்ள காணொளியில்,