பணிப்புறக்கணிப்பு போராட்டம் - முடங்கவுள்ள தொடருந்து சேவை!
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
SL Protest
Sri Lanka Railways
By Kanna
நாளை நள்ளிரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு தாம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தொடருந்து தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
ஆறாம் திகதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் இணைப்பாளர் எஸ்.பி விதானகே தெரிவித்துள்ளார்.
இதன்படி, தொடருந்து இயக்கப் பணிகள், தொழிற்பாடுகள், தொடருந்து கட்டுப்பாட்டுப் பணிகள், நிலைய அதிபர்கள், தொடருந்து இயந்திர சாரதிகள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி