தொடருந்து சேவைகள் மீண்டும் முடங்கும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
தொடருந்து திணைக்களத்தின் சமிஞ்சை மற்றும் செயற்பாட்டுப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வழங்காவிட்டாலே இந்நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தீவிர சமிஞ்சை தொழிநுட்பப் பிரச்சினைகள் இருந்தபோதிலும் தலைமன்னார் வழித்தடத்தில் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.
தற்காலிக நடவடிக்கை
அத்தோடு, மதவாச்சி மற்றும் தலைமன்னார் இடையேயான தொடருந்துகள், சமிஞ்சை பழுதுபார்க்கும் போது தற்காலிக நடவடிக்கையாகப் பயன்படுத்தப்படும் பயலட் முறைமையின் கீழ் ஒற்றைப் பாதையில் இயங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்கம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |