மோசமான வானிலை: அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு அவரஎச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அதிவேக நெடுஞ்சாலைகளில் கனமழை மற்றும் மூடுபனியால் பார்வைத்திறன் குறைந்துள்ள நிலையிலேயே இந்த விசேட எச்சரிக்கைவீதி அபிவிருத்தி அதிகார சபையால் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டும் நிலைமைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
விசேட எச்சரிக்கை
இதன் காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள மின்னணுப் பலகைகளில் காட்டப்படும் எச்சரிக்கை அறிவிப்புகளை கவனமாகப் பின்பற்றுமாறு, அதிகார சபை (RDA) அறிவுறுத்தியுள்ளது.

பகல் நேரங்களில் கூட இருள் மற்றும் கடும் மூடுபனி நிலவுவதால், பயணிக்கும் போது வாகனங்களின் முகப்பு விளக்குகளை கட்டாயம் எரியவிட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
மணிக்கு 60 கிலோமீற்றர் வேக வரம்பிற்குள் வாகனங்களை இயக்குவதுடன், வாகனங்களுக்கு இடையில் பாதுகாப்பான இடைவெளியையும் பேண வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிவேகத்தில் பயணிக்கும் போது திடீரென பிரேக் பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்வது விபத்துகளுக்குக் காரணமாக அமையக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |