மீண்டும் ராஜபக்ச குடும்பத்தினருக்கு அடிக்கவுள்ள ராஜயோகம்! பிரபல ஜோதிடர் ஆரூடம் (காணொளி)
ராஜபக்ச குடும்பத்தில் ராஜயோகம் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் (Mahinda Rajapaksa) நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்குமே (Basil Rajapaksa) உள்ளது என பிரபல ஜோதிடர் கே.ஏ.யூ.சரச்சந்திர (K.A.U.Sarachandra) தெரிவித்துள்ளார்.
இணையத்தள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், வருடம் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் அரசாங்கம் உரிய முறையிலான தேர்தல் ஒன்றுக்கு செல்ல நேரிடும் தன்மை, கிரக நிலைக்கமைய காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள சனி மற்றும் குருப் பெயர்ச்சி காரணமாக நவம்பர் மாதம் 20ஆம் திகதியின் பின்னர் நாட்டினுள் புதிய அரசியல் சக்தி ஒன்று முன்வரும்.
அந்தச் சக்தியினால் எதிர்வரும் காலங்களில் நாட்டின் ஆட்சி கைப்பற்றப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,