மதச் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் கருத்துரைத்த தேரர் பிணையில் விடுதலை
இலங்கையின் மதச் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட இராஜாங்கனை சத்தானந்த தேரர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான உத்தரவை கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற விசாரணை

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையிலும் இலங்கையின் மதச் சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலும் இராஜாங்கனை சத்தானந்த தேரர் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டதாக பாஹியன்கல ஆனந்த சாகர தேரர் முறைப்பாடொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதனையடுத்து, அனுராதபுரத்தில் வைத்து கடந்த மே மாதம் சிறிலங்கா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து, 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் இராஜாங்கனை சத்தானந்த தேரரை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.