நாட்டை விட்டு தப்பியோடும் ராஜபக்ச குடும்பம்....! கசிந்த தகவல்
ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் (Mahinda Rajapaksa) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) மட்டும் இலங்கையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆட்சியின் போது பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக ராஜபக்ச குடும்பம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பல சட்டங்கள் கடுமை
இந்நிலையில் தற்போது, இலஞ்சம் ஊழலை ஒழிக்கும் நோக்கில், ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன் காரணமாக ராஜபக்ச குடும்பம் உட்பட அவர்களுடன் இணைந்து செயற்பட்ட குழுவினர் கடும் அச்ச நிலையில் உள்ளனர்.
அதற்கமைய, நாட்டை விட்டு தப்பிச் சென்ற எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anurakumara Dissanayake) தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரம்
இந்நிலையில், இலங்கையில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லாதவாறு கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதற்கமைய சில அரசியல்வாதிகள் விமான நிலையத்திற்கு சென்ற போதும், குடிவரவு அதிகாரிகளால் (Department of Immigration) அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) உத்தரவுக்கு அமைய சுமார் 30 பேருடைய பெயர் விபரங்கள் விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |