“ராஜபக்ச அரசாங்கம் சலூன் கடையைப் போன்றது” அமைச்சர் சனத் நிசாந்த தெரிவிப்பு
ராஜபக்ச அரசாங்கமானது சலூன் கடையைப் போன்றது - எவரும் உள்நுழையலாம் வெளியேறலாம் என்கிறார் அமைச்சர் சனத் நிஷாந்த (Sanath Nishantha).
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திருந்து இடதுசாரி மத்தியஸ்த சக்திகளை அழைத்துதான் கூட்டு அரசாங்கம் உருவாகிவந்தது. ஏற்கனவே இருந்த அரசாங்கங்களில் இருந்த பிரச்சினைகள்தான் இன்றும் இருந்துவருகின்றன.
அரசாங்கத்தின் தலைவரான அரசதலைவர், பிரதமர் உள்ளிட்டவர்கள் அனைத்தையும் சரிவர நிர்வகித்து தீர்த்து வைப்பார்கள் என நம்புகின்றோம். எமது சகோதர கட்சிகளுக்கு கூட்டணியிலிருந்து வெளியேறச் சொல்லமாட்டோம்.
ஏனெனில், ராஜபக்ஷ அரசாங்கமானது சலூன் கடையைப் போன்றது. எவர் வேண்டுமானாலும் எப்போதும், உள்நுழையலாம் வெளியேறலாம்” எனக் கூறியுள்ளார்.