மே 9 மகிந்த அவுட்!! ஜூன் 9 பசில் அவுட்!! ரணிலின் பிடியில் கோட்டாபய

Basil Rajapaksa Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Sri Lankan political crisis Rajapaksa Family
By Kanna Jun 09, 2022 02:02 PM GMT
Report

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ராஜபக்ச குடும்பம் என்பது தவிர்க்க முடியாத ஓர் அத்தியாயமாக உருவெடுத்திருந்தது. ஸ்ரீலங்காவின் அரசியலில் தமெக்கென ஓர் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருந்தனர் ராஜபக்சவினர். 

2005 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதியில் இக்குடும்பத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் அரசியலில் உயர் பதவிகளை வகித்து வந்தனர். பின்னர் நல்லாட்சி அரசாங்கத்திலும் அவர்களின் ஆதிக்கம் இருந்தது ஆனால் அது பெரிதாக பேசப்படவில்லை. மைத்திரியின் அரசுக்கு பின்னர் ராஜபக்ச குடும்பம் மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியது. கோட்டாபய ஆட்சியில் பிரதமர் பதவி உட்பட நிதித்துறை, விளையாட்டுத்துறை என முக்கிய பதவிகளை தம்மகத்தே வைத்திருந்தனர் ராஜபக்சவினர். ஒட்டுமொத்த நாடையும் அவர்களின் கைக்குள்ளே வைத்திருந்தனர்.

மே 9 மகிந்த அவுட்!! ஜூன் 9 பசில் அவுட்!! ரணிலின் பிடியில் கோட்டாபய | Rajapaksha Family Sri Lanka Politics Basil Resign

சர்வாதிகாரம், ஊழல், மோசமான ஆட்சி, குடும்ப உறுப்பினர்களுக்குச் சலுகை வழங்கல் என பல்வேறு குற்றச்சாட்டுக்களும் இக்குடும்ப அங்கத்தவர்கள் மீது சுமத்தப்பட்டன. எவ்வாறாயினும் இக் குடும்பத்தினரை தமது இன காவலனாக வணங்கி வந்தனர் சிங்களவர்கள்.

2019 ஆம் ஆண்டு உலகெங்கும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா இலங்கையையும் தாக்கியது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இலங்கை கொரோனவுடன் போராடியது. இருப்பினும், சர்வதேச நாடுகள் பாதிப்படைந்த அளவுக்கு இலங்கை கொரோனவால் பாதிப்படையவில்லை.

கொரோனா தொற்றை இலங்கை அரசாங்கம் எதிர்கொண்ட விதத்தை சர்வதேச அமைப்புகளே பாராட்டியது. கொரோனாவின் வெற்றி மாலையை கூட ராஜபக்சவினர் தமது கழுத்தில் போட்டுக் கொண்டனர்.

கொரோனாவின் பின்னரான காலங்களில் ராஜபக்சவினர் தாம் ஆற்றும் அநேகமான விசேட உரைகளிலும் கொரோனாவை தாம் எதிர் கொண்ட விதம் என பெருமையாக சுட்டிக்காட்டுவதை வழமையாக கொண்டிருந்தனர்.

கொரோனாவை தொடர்ந்து இலங்கை மெல்லமெல்ல கடுமையான பொருளாதாரா நெருக்கடியை காண தொடங்கியது. பண வீக்கம், அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு, விலை உயர்வுகள், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடுகள், மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடுகள், எரிபொருளுக்கு வரிசைகள், எரிவாயுவுக்கு வரிசைகள் என அனைத்து விதத்திலும் இலங்கை கடுமையாக பாதிப்படைந்தது.

இலங்கையின் இவ்வாறான நிலைமைக்கு முழுக்க முழுக்க ராஜபக்ச குடும்பத்தினரே காரணம் என மக்கள் கோஷமிட தொடங்கினர். இனக்காவலர்களாக ராஜபக்சவினரை வணங்கிய சொந்த மக்களே ராஜபக்சவினரை வெளியேறுமாறு கோஷமிடத் தொடங்கினர். மக்கள் அனைவரும் வீதிகளுக்கு இறங்கினர். நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தது. கோட்டா கோ ஹோம் எனும் கோஷம் உரக்க ஒலிக்க தொடங்கியது .

மே 9 மகிந்த அவுட்!! ஜூன் 9 பசில் அவுட்!! ரணிலின் பிடியில் கோட்டாபய | Rajapaksha Family Sri Lanka Politics Basil Resign

உக்கிரமடைந்த மக்களின் போராட்டங்களை தொடர்ந்து ராஜபக்ச குடும்பத்தின் சாம்ராஜ்ஜியம் மெதுவாக சரியத் தொடங்கியது. ராஜபக்சவினர் ஒன்றன்பின் ஒன்றாக வீழ்த்தப்படுவதை கண்முன் காணக் கூடியதாக இருந்தது.

இந்நிலையில் கடந்த மே 9 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியிலிருந்து விலகியிருந்தார். அத்துடன் இன்று ஜூன் 9 பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற பதவியிலிருந்து விலகியுள்ளார்.

மகிந்த பதவி விலகியதன் பின்னணி

கடந்த மே 9 முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகுவதை அறிவிப்பதாக குறிப்பிட்டதை தொடர்ந்து அவரை வழியனுப்பி வைப்பதற்காகவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆதரவாளர்கள் அலரி மாளிகைக்கு அழைத்து வரப்பட்டனர். அலரி மாளிகைக்கு வந்த ஆளும் தரப்பு ஆதரவாளர்களுக்கு அரசுக்கு எதிராக போராடியவர்களை தாக்குமாறு ஏவிவிடப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆளும் தரப்பு ஆதரவாளர்கள் கொள்ளுப்பிட்டி மைனா கோ கம மற்றும் காலி முகத்திடல் கோட்டா கோ கம நோக்கி தாக்குதல் நடாத்த புறப்பட்டனர். காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள சென்ற குண்டர்களை தடுக்க வேண்டாம் என காவல்துறைமா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் குறிப்பிட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

மே 9 மகிந்த அவுட்!! ஜூன் 9 பசில் அவுட்!! ரணிலின் பிடியில் கோட்டாபய | Rajapaksha Family Sri Lanka Politics Basil Resign

இந்நிலையில், குண்டர்களின் மிலேச்சத்தனமான தாக்குதல் அரசுக்கு எதிராக போராடிய இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என பாராபட்சம் இன்றி அனைவரின் மீதும் கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்டது. கலவர பூமியாக மாறியது தலைநகர். அரச எதிர் போராட்டக்காரர்களும் மகிந்தவின் ஆதரவாளர்களை தேடிப்பிடித்து தாக்க ஆரம்பித்தனர்.

அவசர அவசரமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, இருப்பினும் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. கலவரம் தீவிரமடைந்ததையடுத்து, பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகுவதாக அறிவித்தார்.

மே 9 மகிந்த அவுட்!! ஜூன் 9 பசில் அவுட்!! ரணிலின் பிடியில் கோட்டாபய | Rajapaksha Family Sri Lanka Politics Basil Resign

மகிந்தவின் பதவி விலகல் என்பது இலங்கை அரசியலில் ஏற்பட்ட மிகப்பெரிய திருப்புமுனை ஆகும். மக்களின் கிளர்ச்சியின் உச்சம் மகிந்த ராஜபக்சவை பதவி விலக வைத்து சொந்த நாட்டிலேயே ஒளிந்து இருக்கச் செய்தது.

பசில் பதவி விலகியதன் பின்னணி 

இது ஒருபுறமிருக்க தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவான பசில் ராஜபக்ச இன்று ஜூன் 9 ஆம் திகதி தனது நாடாளுமன்ற பதவியில் இருந்து விலகியுள்ளார்.

மகிந்தவின் பதவி விலகலை தொடர்ந்து தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவான ரணில் விக்ரமசிங்கவிடம் பிரதமர் பதவியை ஒப்படைத்திருந்தார் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச.

மே 9 மகிந்த அவுட்!! ஜூன் 9 பசில் அவுட்!! ரணிலின் பிடியில் கோட்டாபய | Rajapaksha Family Sri Lanka Politics Basil Resign

ரணில் பதவியேற்றால் நாட்டின் நெருக்கடிகள் ஓரளவுக்கு தீர்ந்துவிடும் என பலர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ரணிலின் பதவியேற்புக்கு பின்னர் நாடு மேலும் திவாலடைந்து உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

பிரதமராக பதவியேற்ற ரணில், பொருளாதார கட்டமைப்பை ஒருபுறமாக செய்து வந்தாலும் அரசியலமைப்பு திருத்தத்தின் மீதே தனது முழு கவனத்தையும் திருப்பினார். நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை கொண்டு 21 ஆம் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை உருவாக்கினார்.

21ஆவது அரசியல் திருத்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டால் பசில் ராஜபக்ச அரசியலில் ஈடுபட முடியாத நிலை ஏற்படும். இந்த சட்டம் மூலத்தில் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 21ஆவது திருத்தத்தை நிறைவேற்ற பசில் ராஜபக்ச ரணிலுக்கு முட்டுக்கட்டையாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

மே 9 மகிந்த அவுட்!! ஜூன் 9 பசில் அவுட்!! ரணிலின் பிடியில் கோட்டாபய | Rajapaksha Family Sri Lanka Politics Basil Resign

இவ்வாறிருக்க சில தினங்களுக்கு முன்னர் தனது ஆதரவாளர்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த பசில் ராஜபக்ச, 21ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என எச்சரித்ததாகவும் இதன்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாகவும், இந்த சண்டித்தனங்களை அரச தலைவரான அண்ணனுடன் வைத்துக்கொள்ளுமாறு ரணில் திரும்பி அனுப்பியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இச் சூழ்நிலையில் பசில் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததாகவும் 21 வது திருத்தும் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் அவராகவே தனது பதவியில் இருந்து விலகியுள்ளார் என தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பாரிய மக்கள் புரட்சி இலங்கை ஆட்சியாளர்களை ஆட்டம் காண வைத்திருக்கிறது.

இந்நிலையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பசில் ராஜபக்சவும் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

தற்பொழுது அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மாத்திரமே எஞ்சியுள்ளார். சகோதர ஒற்றுமையால் பிணைக்கப்பட்ட ராஜபக்ச ஆட்சியில் கோட்டாபய மாத்திரமே தனித்து நிற்கிறார். ரணிலால் 21 திருத்தம் நிறைவேற்றப்பட்டு அதிகாரமற்ற பகடக்காயாய் கோட்டாபய மாற்றப்பட்டு அவராகவே பதவி விலகுவார் என அரசியல் அவதானிகள் பலர் சுட்டிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமது குடும்பத்துக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்து இலங்கையின் அரசியலை நடத்தி வந்த ராஜபக்ச குடும்பம், மக்கள் புரட்சியினை பார்த்து இன்று விழி பிதுங்கி நிற்கிறார்கள். அவர்கள் இதனை தமது அரசியல் வாழ்க்கையில் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள் என்பது மாத்திரம் உண்மை.   

ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025