தலைவர் பிரபாகரனைச் சுடச்சொன்ன ராஜீவ் காந்தி
ஈழப்போராட்டத்தில் இந்திய அரசின் நடவடிக்கைகளில் உள்ள இராஜதந்திர நகர்வுகள் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆயுதமேந்தி வெளிப்படுத்திய கோரத்தின் அடையாளங்களாகும்.
அமைதி காக்கும் IPKF இன் இந்த நடவடிக்கைகளின் இறுதி புள்ளி விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரை இலக்குவைத்தது இருந்தமையும் மறுக்க முடியாத ஒன்றுதான்.
இதன்படி 1987 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் டெல்லியில் அரசியல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டமையும், IPKF மற்றும் RAW (Research and Analysis Wing) அதிகாரிகள் பிரபாகரனை இரகசியமாக “பிடிக்க” பல முயற்சிகளை மேற்கொண்மையும் பல ஆவணங்களில் விளக்கப்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஹர்கிராத் சிங் எழுதிய புத்தகத்தின்படி, பிரபாகரனை இரகசியமாக கொல்லும் திட்டங்கள் இரண்டுமுறை உருவாக்கப்பட்டன என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
ஆனால், இந்திய அரசியல் மேலதிகாரிகள் மற்றும் சட்ட காரணங்கள் காரணமாக, அந்த திட்டங்கள் செயல்படவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.
அவ்வாறு என்றால் 13ஆம் திருத்தச்சட்டத்தில் தமிழர்களுக்கு தீர்வு என்ற முகமூடி வடிவமைக்கப்பட்டு, திரையிடப்பட்டு அதன் பின்னால் தமிழர்களை அழித்தொழிக்கும் செயற்பாட்டையா அப்போதைய இந்திய ஜனாதிபதி மேற்கொண்டார்?
இவ்வாறு யுத்தகாலத்தில் இந்திய இராஜதந்திரத்தில் இருந்து மறைக்கப்பட்ட கோரங்களையும், அமைதிக்கான அதன் மருவடிவத்தையும் வெளிப்படுத்தி வருகிறது ஐ.பி.சி தமிழின் அவலங்களின் அத்தியாயம்...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |