ஜனாதிபதி செயலகம் அருகே கூடாரம் அமைக்க முற்பட்ட பிக்குகளால் பதற்றம்

Colombo Galagoda Aththe Gnanasara Thero Protest
By Dharu Oct 15, 2026 04:02 PM GMT
Report

புதிய இணைப்பு 

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி நடை பேரணி மேற்கொண்டு கொழும்பு ஜனாதிபதி செயலகத்தை வந்தடைந்த பௌத்த தேரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கூடாரம் ஒன்றை அமைக்க முற்பட்ட பிக்குகள்

காலி முகத்திடல் பகுதியில் தேரர்கள் கூடாரம் ஒன்றை அமைக்க முற்பட்ட போது அதனை, தடுப்பதற்கு காவல்துறையினர் முற்பட்டனர்.

ஜனாதிபதி செயலகம் அருகே கூடாரம் அமைக்க முற்பட்ட பிக்குகளால் பதற்றம் | Rally Support Gnanasara That Took A Different Turn

இந்தச் சம்பவத்தின் போது, ​​பிக்குகளுக்கும் காவல்துறைக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரரின் விடுதலை குறித்து அரசாங்கம் சாதகமான அறிவிப்பை வெளியிடும் வரை, தாங்கள் இந்த இடத்தை விட்டு அகலப்போவதில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் வலியுறுத்தியுள்ளனர்.


இரண்டாம் இணைப்பு

கலகொடஅத்தே ஞானசார தேரரை சிறையிலிருந்து விடுதலை செய்ய வலியுறுத்திய பேரணி ஜனாதிபதி செயலகத்தை நோக்கி வருகைதந்த நிலையில் தற்போது அங்கு வீதிகளை மறைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த தரப்பினர் ஜனாதிபதியை நேரில் கண்டு ஞானசார தேரரை சிறையிலிருந்து விடுதலை செய்வது குறித்து கலந்துரையாட வேண்டும் என கோஷமிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் குறித்த தரப்பினர் காலிமுகத்திடல் வீதியில் அமர்ந்து ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகள், ஜனாதிபதி செயலாளருடன் பேச்சுவார்த்தை ஒன்றையும் முன்னெடுத்தனர்.

தமது கோரிக்கைக்கு சாதகமான முடிவை அறிவிப்பதற்காக 10 நிமிட கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும், அந்தக் காலப்பகுதிக்குள் சாதகமான பதில் கிடைக்காவிட்டால் போராட்டம் தொடரும் எனவும் பௌத்த பிக்குகள் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முதலாம் இணைப்பு 

திசை மாறிய ஞானசார தேரருக்கு ஆதரவான பேரணி! பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு 

கலகொடஅத்தே ஞானசார தேரரை சிறையிலிருந்து விடுதலை செய்ய வலியுறுத்தி, மகா சங்கத்தினரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட “சிவரட்ட யுக்திய – தேசிய சூளுரை ஏற்பு மற்றும் சுதந்திரப் பேரணி” ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி கண்டியிலுள்ள தலதா மாளிகை வளாகத்திலிருந்து இந்தப் பாதயாத்திரை ஆரம்பமான நிலையில் இன்று கொட்டும் மலைக்கு மத்தியிலும் கொழும்பை வந்தடைந்தது.

தெமட்டகொடை சந்தி வரை சென்றடைந்த இந்தப் பாதயாத்திரை, தற்போது மாளிகாவத்தை நோக்கிப் பயணித்து வருவதாகவும், அங்கிருந்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குற்றச்சாட்டுகளை மறைக்கும் ஆன்மீக கேடயம்! தியானத்தில் ஆழ்ந்துள்ள நாமலுக்கு பறக்கும் சக்தி

குற்றச்சாட்டுகளை மறைக்கும் ஆன்மீக கேடயம்! தியானத்தில் ஆழ்ந்துள்ள நாமலுக்கு பறக்கும் சக்தி

பாதுகாப்பு நடவடிக்கை

இதனையடுத்து, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகம் அருகே கூடாரம் அமைக்க முற்பட்ட பிக்குகளால் பதற்றம் | Rally Support Gnanasara That Took A Different Turn

 முன்னதாக குறித்த பேரணி வெலிக்கடை சிறைச்சாலையை நோக்கி செல்வதாக திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் தமது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஞானசாரரின் காவி உடை அகற்றியமைக்கு எதிரான மனு : நீதிமன்றின் உத்தரவு

ஞானசாரரின் காவி உடை அகற்றியமைக்கு எதிரான மனு : நீதிமன்றின் உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சிட்னி, Australia

18 Nov, 2011
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, பூந்தோட்டம்

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, வவுனியா

16 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

16 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026