52 ஆயிரம் பேருக்கு குடும்பக் கட்டுப்பாடு - ராமேஷ்வரன் எம்.பி வெளியிட்ட தகவல்
மைத்திரி - ரணில் தலைமையிலான கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் மலையகத்தைச் சேர்ந்த 52 ஆயிரம் பேருக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் பல பாதகமான விடயங்கள் மலையக மக்களுக்கு இழைக்கப்பட்டதாக கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் நேற்று(13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் சாடியுள்ளார்.
இதன்போது மேலும் பேசிய அவர்,
நல்லாட்சியின் போது 52 ஆயிரம் பேருக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது என நீங்களே குறிப்பிடுகின்றீர்கள்.
ஆனால், கடந்த நல்லாட்சியில் மலையக அமைச்சர்களும் இருந்தனர்.அப்போது ஏன் இது பற்றி நீங்கள் கேள்வி எழுப்பவில்லை.
இந்த விடயம் மாத்திரமல்ல, மலையக மக்களுக்கு பாதகம் ஏற்படக்கூடிய பல விடயங்கள் நல்லாட்சியின்போது செய்யப்பட்டுள்ளன.
மலையக மக்கள் மீது அதிக பொறுப்பு எமக்கு இருக்கிறது. மக்களுக்கு பிரச்சினை என்றால் விரைந்து செயற்படுவோம். உதவி செய்துவிட்டு அதனை ஊடகங்களில் பிரசாரம் செய்யமாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.