ஊடகவியலாளரைப் போல் செயற்படும் ரணில் - எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
SJB
Ranil Wickremesinghe
Saidulla Marikkar
Journalists In Sri Lanka
By Sumithiran
ஊடகவியலாளர் போல் செயல்படும் பிரதமர்
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் பிரதமரே நாட்டுக்குத் தேவை, மாறாக ஊடகவியலாளர் போல் செயல்படும் பிரதமர் நாட்டுக்கு தேவை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டின் நெருக்கடி நிலைமைகளை மக்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர் போலவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உர கொள்வனவு
மேலும் எரிபொருளுக்காக தற்பொழுது செலவிடப்படும் நிதியை உரத்தை கொள்வனவு செய்ய செலவிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

