ரணிலின் கைது: சிஐடியில் குழப்பத்தை ஏற்படுத்திய பிக்கு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவதற்கு எதிராக ஒரு பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்னால் கூடி நின்று குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் கலந்து கொண்டிருந்த பௌத்த பிக்கு ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, “நாட்டில் அரசியலில் பெரும் பங்காற்றிய ஒரு தலைவரை இவ்வாறு இழிவுபடுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத காரணமாகும்.
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு
குற்றப்புலனாய்வு திணைக்களத்தை ஆரம்பித்தவரும் இவராவார். ஒரு குற்றவாளி அல்லது மோசடிக்காரராக இருந்தால் இவ்வாறான நிறுவனங்களை ஆரம்பித்திருக்கமாட்டார்.
இவ்வாறான ஒரு அரசாங்கத்தை நாம் ஏற்படுத்திக் கொண்டதை நினைத்து வெட்கப்படுகிறோம்”என கூறியுள்ளார்.
இந்த நிலையில், வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களம் சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
