ரணிலுடன் கைகோர்க்கும் 60 உறுப்பினர்கள்! வெளியாகவுள்ள பெயர் விபரங்கள் - பரபரப்பை ஏற்படுத்திய பாலித ரங்கே பண்டார
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களை விபரங்கள் விரைவில் வெளிவரும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
எனினும் தங்கள் கட்சியைச் சேர்ந்த எவரும் விக்ரமசிங்கவை ஆதரிக்க மாட்டார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றத்தில் 60 உறுப்பினர்கள் எவ்வாறு ஆதரிக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதில் வழங்கியுள்ள ரங்கே பண்டார, 60 உறுப்பினர்களில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும ஐக்கிய மக்கள் சக்தியின் துணை தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் பாட்டலி சம்பிக
ரணவக்கவுக்கு சிரேஷ்ட்ட பதவி ஒன்றை வழங்குவதற்கான பேச்சுக்கள் நடைபெற்று
வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
யாழில் ஓய்வுபெற்ற அதிகாரியின் வீடு புகுந்து தாக்குதல் - பின்னணியில் அரசியல் அழுத்தம்.! NPP உறுப்பினருக்கு உடனடி பிணை
EPDP இன் பங்காளிகளான சுமந்திரன் தரப்பிற்கு தமிழ் தாய்மார்களுடைய கண்ணீர் பயணத்தில் கரம் கொடுக்க மனம் வராதுதான்
அரசாங்கம் நீதித்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி! அஜித் பி பெரேரா பகிரங்க குற்றச்சாட்டு