ரணில் பிரதமரானால் 48 மணிநேரத்தில் முற்றுப்புள்ளி! ஐ.தே.க உறுதி (காணொலி)
UNP
Colombo
Economy
SriLanka
Vajira Abeywardena
Ranil Wikramasingke
By Chanakyan
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற ஆசனம், பிரதமர் ஆசனமாக மாறுவதற்கான சாத்தியம் உள்ளதாக கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவிக்கின்றார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
தனது கட்சியின் தலைவர், நாட்டை பொறுப்பேற்று 48 மணித்தியாலங்களிலேயே அனைத்து விதமான வரிசைகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்படும்.
தற்போதைய ஆட்சியாளர்கள் சர்வதேசத்தின் நம்பிக்கையை இழந்துள்ளனர்.
சர்வதேச நம்பிக்கையை வென்ற ஆட்சியாளர் ஒருவர், நாட்டின் ஆட்சிக்கு வந்தவுடன், சர்வதேசம் நாட்டிற்கு உதவிகளை உடனடியாக வழங்கும் என்றும் அவர் மேலும் நம்பிக்கை வெளியிட்டார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்