ஹமாஸ் தலைவர் படுகொலை : ஜனாதிபதி ரணில் கடும் கண்டனம்
ஈரானில் வைத்து ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலை செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஆகியவற்றின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி விக்ரமசிங்க, இவ்வாறான செயற்பாடுகளை தாம் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என குறிப்பிட்டார்.
சர்வதேச சட்டம் மற்றும் நாடுகளின் இறையாண்மையை மதிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார், மோதல்களுக்கு அமைதியான தீர்வுக்கு அழைப்பு விடுத்தார்.
கண்காணிக்க உயர் மட்டக் குழு
இதேவேளை ஈரானில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலகில் ஏற்படக் கூடிய நிலைமையினால் இலங்கைக்கு ஏற்படக் கூடிய பாதுகாப்பு, பொருளாதார பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கான முன் ஆயத்தமாக தேசிய பாதுகாப்பு தொடர்பான குழுவையும், பொருளாதாரம் தொடர்பான குழுவையும், இவற்றைக் கண்காணிக்க உயர் மட்டக் குழுவையும் நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |