காவல்துறை மா அதிபர் விவகாரம் : ரணிலைக் குற்றஞ்சாட்டும் அனுர
காவல்துறைமா அதிபர் விவகாரத்தில் அரசியல் நோக்கத்திற்காகவே ஜனாதிபதி தீர்மானமொன்றை மேற்கொள்ளாமல் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார (Anura Kumara Dissanayake) திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
புல்நேவ பகுதியில் நேற்று (30) விவசாயிகளைச் சந்தித்து கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”நாட்டில் காவல்துறை மா அதிபர் விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
நாடாளுமன்றில் பிரதமர் அறிவிப்பு
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சவாலுக்கு உட்படுத்தி பிரதமர் நாடாளுமன்றில் கருத்துரைக்கின்றார். அதனை நாடாளுமன்றத்திற்கு வெளியே கூறுவாராயின் அவர் கைது செய்யப்பட வேண்டும்.
சபாநாயகரும் உயர்நீதிமன்றமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கூறுகிறார். இலங்கையில் அவ்வாறான பேச்சுவார்த்தை முறைமை ஒன்று இல்லை.
தேசபந்து தென்னகோன் அவசியம்
இவ்வாறான பேச்சுவார்த்தைகளில் உயர்நீதிமன்றம் பங்குபற்றாமல் உள்ளமையை முன்னிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
அத்துடன் காவல்துறையை பயன்படுத்தி அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் முனைகின்றார். அதற்கு முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) அவசியமாகவுள்ளார்.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |