தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைத்தே தீரும்: ரணிலை புகழும் சுசில் பிரேமஜயந்த

Sri Lankan Tamils A D Susil Premajayantha Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lanka
By Dhilak Oct 16, 2023 09:02 AM GMT
Report

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணும் செயற்பாடுகளில் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டு வருகின்றதாகவும் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடுத்த வருட ஆரம்பத்தில் தீர்வுகள் கிடைத்தே தீரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அதேவேளை, தமிழ் அரசியல்வாதிகள் அதிபர் மீதும், அரசு மீதும் குற்றச்சாட்டுக்களை மாத்திரமே முன்வைத்து வருகின்றார்கள். ஆனால், அவர்கள் தீர்வுகளைக் காண்பதற்கு அரசுடன் இணைந்து செயற்படப் பின்னடிக்கின்றார்கள் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழர்களுடைய வாக்குகள் பற்றி எங்களுக்கு கவலையில்லை: நாமல் திட்டவட்டம்

தமிழர்களுடைய வாக்குகள் பற்றி எங்களுக்கு கவலையில்லை: நாமல் திட்டவட்டம்


பிரச்சினைகளுக்கு தீர்வு

இது தொடர்பில் மேலும் கருத்துரைத்த அவர், “பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை அரசு முன்வைத்த பின்னரே அரசுக்கு ஆதரவு வழங்குவோம் என்று தமிழ் அரசியல்வாதிகள் நிபந்தனையை முன்வைக்கின்றார்கள்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைத்தே தீரும்: ரணிலை புகழும் சுசில் பிரேமஜயந்த | Ranil In The Activities To Find Solutions Tamils

தீர்வுகள் கிடைத்த பின் ஆதரவு எதற்கு? ஆதரவை வழங்கி அரசுடன் இணைந்து பயணித்தால்தானே தீர்வுகளை வென்றெடுக்க முடியும். வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காணும் செயற்பாடுகளில் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டு வருகின்றார்.

தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடுத்த வருட ஆரம்பத்தில் தீர்வுகள் கிடைத்தே தீரும் என்ற நம்பிக்கை உண்டு. நாம் வாயால் சொல்வது செயலில் நடப்பது கடினம்தான். எனினும், இந்த விவகாரத்தில் அதிபரும் அரச தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்கள்.

தமிழ் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு எமக்குக் கிடைத்தால் அது மேலும் பலமாக இருக்கும். தீர்வுகளை நாம் விரைந்து வென்றெடுக்க முடியும்” என்றார்.

கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு

கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்