கிளிநொச்சி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு - அதிபர் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
கிளிநொச்சியில் உள்ள விவசாயிகளின் நெல்லை கிலோ ஒன்றுக்கு 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கான பொறிமுறையை அரசாங்கம் ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
இன்றைய தினம் (12) கிளிநோச்சி விஜயம் மேற்கொண்ட அதிபர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சி மாவட்டத்தின் பண்ணங்கண்டி பகுதியில் அறுவடை விழாவில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மாளன தலைவர் மற்றும் செயலாளர் பொருளாளர் ஆகியோர் நேரடியாக அதிபரை சந்தித்து கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மானிய விலை
குறித்த கலந்துரையாடலில் தற்பொழுது நெல்லுக்கான உரிய விலை நிர்ணயிக்கப்படாமையாலும் விவசாயிகளுக்கான உள்ளிடுள் மற்றும் கிருமினாசினிகள் மானிய விலையில் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பான விடயமும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் தற்போதைய சூழலில் விவசாயிகள் எதிர்நோக்கும் எரிபொருள் பிரச்சனை தொடர்பாகவும் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.
நெல்லுக்கான விலையில் ஏற்ப்பட்டுள்ள வீழ்ச்சிதொடர்பாக விவசாயிகள் கேட்டபொழுது அதிபர் ரணில் தெரிவிக்கையில்,
நிர்ணய விலை

''நெல்லுக்கான நிர்ணய விலையாக ஒரு கிலோ நெல்லின் விலை 100 ரூபாய் என நிர்ணயிக்க முடிவு செய்யப்படும், இவ்விலையில் கொள்வனவு எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும்.'' என கமக்கார அமைப்புக்களின் சம்மாளன தலைவரிடம் தெரிவித்ததாக கமக்கார அமைப்புக்களின் செயலாளர் மற்றும் தலைவர் தெரிவித்திருந்தார்.