ரணில் ஒரு செயல்வீரன் - நாடாளுமன்றில் புகழாரம்
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க ஒரு செயல்வீரன் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப்க் புகழாரம் சூடியுள்ளார்.
இன்று(22) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்றைய தினம் சுற்றுலாத்துறை தொடர்பான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
மிகப் பொருத்தமான தலைவர்

குறிப்பாக இலங்கை நெருக்கடியான நிலையிலிருந்து இப்போது பங்களாதேஷிடம் இருந்து பெற்ற 200 மில்லியன் டொலர் கடனிலிருந்து 50 மில்லியன் டொலர்களை நாங்கள் ஒரு தேசமாக செலுத்தி இருக்கிறோம்.
எனவே வங்குரோத்து நிலையில் இருந்து பெற்ற கடனை மிகச் செலுத்தக்கூடிய நிலைக்கு நாம் மாறி இருக்கிறோம், என்றால் அது மகிழ்ச்சியான விடயம். அந்த விடயத்திற்காக அதிபர் ரணில் விக்ரமசிஙகவுக்கு நான் இந்த இடத்தில் பாராட்டுக்களை கூறுகிறேன்.
ரணில் விக்ரமசிங்க ஒரு செயல் வீரன். இன்றைய இந்த காலகட்டத்திற்கு மிகப் பொருத்தமான ஒரு தலைவர் என்பதை அவர் மீளவும் மீளவும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்.
என்னுடைய தனிப்பட்ட விருப்பாக நான் இந்த இடத்தில் ஒரு விடயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.
இந்த தேசத்தை 15 வருடங்களுக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக - நிரந்தர அதிபராக நியமித்து அவருடைய தலைமையின் கீழ் நாடாளுமன்ற தேர்தல்களை மட்டுமே நடத்தக்கூடிய நிலையை இந்த நாட்டிலே உருவாக்குவோமாக இருந்தால், பொருளாளர் ரீதியாக இந்த நாட்டை அவர் உயர்த்துவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இது எனது தனிப்பட்ட கருத்து” என்றார்.