அதிபர் தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்கும் ரணில்

By Sathangani Feb 26, 2024 04:05 AM GMT
Report

இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலில் விரிவான கூட்டணி அமைக்க இருக்கிறோம். அதில் ரணில் விக்ரமசிங்க கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்குவார் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

”நாடு தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், நாட்டை மீட்பதற்குத் தனி ஒரு கட்சியால் முடியாது. அனைவரின் ஒத்துழைப்பு அவசியமாகும். அதனால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறும் அதிபர் தேர்தலில் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் வேலை செய்ய முடியுமான அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்துக்கொண்டு விரவான கூட்டணி ஒன்றை அமைக்க இருக்கிறோம்.

பசில் மீண்டும் நாடு திரும்புவது ரணிலை அதிபர் ஆசனத்தில் இருத்தி அழகுபார்ப்பதற்கல்ல : உதயங்க வீரதுங்க

பசில் மீண்டும் நாடு திரும்புவது ரணிலை அதிபர் ஆசனத்தில் இருத்தி அழகுபார்ப்பதற்கல்ல : உதயங்க வீரதுங்க

நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புதல்

அதுதொடர்பான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. அந்த கூட்டணியில் ரணில் விக்ரமசிங்க கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்குவார்.

அத்துடன் நாடு வங்குராேத்து அடைந்திருந்த நிலையில் நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை. ஆனால் ரணில் விக்ரமசிங்க விழுந்திருந்த நாட்டை கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும்போது, தற்போது நாட்டை பொறுப்பேற்க பலரும் முன்வர தயாராக இருக்கிறாார்கள்.

அதிபர் தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்கும் ரணில் | Ranil Is Contesting As Non Party Candidate Pre Ele

அடுத்த அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளர்களாக களமிறங்க 15 பேர் வரை இருக்கிறார்கள். ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை யாரால் மீள கட்டியெழுப்ப முடியும் என்பதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர்.

அத்துடன் நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் அரச அதிகாரிகள் இதனைவிட பொறுப்புடன் செயற்பட வேண்டும். அவர்களின் அன்றாட கடமைகளை அவர்கள் இழுத்தடிப்பு செய்யாமல் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள முன்வரவேண்டும்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை

பொருளாதார நெருக்கடிக்கு மத்திய வங்கியே பொறுப்பு

நாட்டின் முன்னேற்றத்திற்கு அரச அதிகாரிகளின் செயற்திறமையும் முக்கியமாகும். அதனால் நாட்டின் நிலைமையை உணர்ந்து அவர்கள் செயற்பட வேண்டும்.

அதிபர் தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்கும் ரணில் | Ranil Is Contesting As Non Party Candidate Pre Ele

மேலும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்திய வங்கியே பொறுப்பாகும். இதனை நான் ஆரம்பத்தில் இருந்தே தெரிவித்து வருகிறேன். நாட்டின் நிதி முகாமைத்துவம் இருப்பது அவர்களிடமாகும். அவர்கள் ஏனைய துறையினருக்கு விரல் நீட்டுகிறார்களே தவிர அவர்களின் பொறுப்பை செய்ய தவறினார்கள்.

இந்நிலையில் மத்திய வங்கி அதிகாரிகள் தங்களின் சம்பளத்தை பாரியளவில் அதிகரித்துக்கொண்டுள்ளனர். இது எந்த வகையிலும் நியாயம் இல்லை. எமது காலத்தில் சாதாரண சம்பள அதிகரிப்புக்கு நாங்கள் அனுமதி வழங்கி இருந்தோம்”  என ரவி கருணாநாயக்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டைவிட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்கள்

நாட்டைவிட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்கள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019